in

சிவகங்கையில் கொடூரம்: பட்டியலின கல்லூரி மாணவரின் கைகளை வெட்டிய கும்பல்

மாணவரின் கைகளை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Gang chopped hands of Scheduled Caste college student

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமி புல்லட் வாகனம் வைத்துள்ளார். இது மற்ற சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்களுக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் அய்யாசாமி நேற்று கல்லூரியிலிருந்து வரும்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்துவிட்டு எப்படி புல்லட் ஓட்டலாம் எனக் கேட்டு அவரின் கைகளை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அய்யாசாமி தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கைகளைச் சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

அய்யாசாமி குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் அந்த இளைஞர்கள் அவர்களது வீட்டிற்குச் சென்று சரமாரியாக அடித்து நொறுக்கி வீட்டைச் சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்

முருகன் கோவில் பூட்டை உடைத்த திருடர்கள்