
தூத்துக்குடி:
கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (21வயது), திருநெல்வேலியை சேர்ந்த ரஞ்சித் (22வயது), தூத்துக்குடியை சேர்ந்த (16 வயது) சிறுவன் என்பதும் அவர்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings