
இராமநாதபுரம்:
அரியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (41வயது) இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதத்தில் சில நாட்களாக மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு அரியநாதபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையில் வழிமறித்த மர்ம நபர்கள், கருப்பசாமியை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings